Janu / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நன்னபுராவை, தஹம்கம வீதியை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
12ஆம் தரத்தில் கல்வி பயிலும் ஜே. எம். ஹசினி மதுவந்தி (17 வயது) என்ற மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சம்பவம் குறித்து மாணவியின் தந்தையான ஜே. எம். ஜயவர்தன, மெதகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த 21ஆம் திகதி மாலை 6.00 மணியளவில், உடல்நலக்குறைவு காரணமாக அவரது மனைவி நித்திரையில் இருந்த வேளையில், மகள் வீட்டிலிருந்து வெளியேறி சென்றுள்ளதாகவும் மகள் காணாமல் போய் பல நாட்களாகியும், அவர் குறித்த எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது அவரது தந்தையின் 0710156492 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சுமனசிறி குணதிலக்க

34 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
38 minute ago
1 hours ago