2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் சிக்கினர்

Janu   / 2025 ஜனவரி 26 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ,பொட்ரி தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்  

தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழலை அழித்து சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்ட நான்கு பேரில் இருவர் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மற்ற இருவர் பொட்ரி தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X