2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

மாணிக்கக் கல் அகழ்ந்த மூவர் அதிரடியாக கைது

Freelancer   / 2023 மார்ச் 13 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித்ராஜபக்ஷ

சிவனொளிபாத மலை இயக்கை வனாந்தரத்துக்குள் அத்துமீறி நுழைந்து மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பொகவந்தலாவை பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வனாந்தரத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மூவர், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர் என கிடைத்த தகவல்களுக்கு அமையவே இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் . அத்துடன், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் அவர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X