Editorial / 2018 பெப்ரவரி 15 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.கு.புஷ்பராஜ்
அக்கரப்பத்தனை, மெனிக்பாலம் போபத்தலாவை காட்டுக்குள், சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் மீதான குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலா 50ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் புபுது ஜெயரத்தன, நேற்று மாலை உத்தரவிட்டார்.
மேற்படி பகுதியில், சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் விஷமிகள் ஈடுபட்டு வருகின்றனர் என, அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆனந்த சிறி தலமையிலான குழுவினர், மேற்படி பகுதியில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையில் மூவரைக் கைதுசெய்த பொலிஸார், அவர்களை நேற்று முன்தினம் மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago