R.Tharaniya / 2025 செப்டெம்பர் 07 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மவுஸ்சாகலை நீர்தேக்கத்திற்கு நீரை வழங்கும் பிரதான ஓயாக்களின் ஒன்றான மறே ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கற்கள் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.
இச் சம்பவம் சனிக்கிழமை (06) அன்று மதியம் இடம்பெற்று உள்ளது என நல்லதண்ணி வனத்துறை அதிகாரி D.M.A.J.துனுவில தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
மறே தோட்டத்தில் நடாத்தப்படும் பிஸ்சிங் ஹட் பகுதிக்கு அதிக அளவில் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வந்து செல்லும் பகுதியில் இன்று 6 ஆம் திகதி மதியம் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 25 வயது முதல் 60 வயது வரை உடைய சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக மாணிக்கக்கற்கள் அகழ்வின் ஈடுபட்டு வந்த வேலையில் நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சந்தேகநபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டு எதிர்வரும்10 ம் திகதி புதன்கிழமை ஹட்டன் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜராகுமாறு பணிக்கபட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரி D.M.A.J துனுவில தெரிவித்தார்.
செ.தி.பெருமாள்
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago