2026 மே 14, வியாழக்கிழமை

dd

மாத்தளை மாநகரசபையின் 2020க்கான பாதீடு தோற்கடிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாநகர சபையின் வரவு-செலவுத்திட்டம், சபையின் தலைவரால், நேற்று (18), சபையில் முன்வைக்கப்பட்டது.

சபையின் நடவடிக்கையின் போது, மூன்று உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை.

இந்நிலையில், வரவு-செலவுத்திட்டம் வாசிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்காக விடப்பட்ட போது, ஆதரவாக 8 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய தேசியக் கட்சி, ஒன்றிணைந்த முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே, சபைக்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .