2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாத்தளை மாவட்டத்தில் தரிசு நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்டங்களில் தேயிலை பயிரடப்படாமல் இருக்கும் நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருகிறதென, சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹார தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் பெரும்பாலான நிலங்கள்  எவ்வித உற்பத்திகளும், அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படாமல் அதிகமாக தரிசு நிலங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்று அவற்றில் குறித்த பிரதேசங்களில் வீடுகளின்றி இருப்பவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான அவதானம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .