Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2018 ஜூன் 06 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை மாவட்டத்தில் 65 சதவீதமான விவசாயிகள் இருக்கின்ற போதிலும், இவர்களின் நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படாதுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன, மாத்தளை மாவட்டத்திலுள்ள நீர்வளம் வேறு பிரதேசங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல வினாக்களுக்கான பத்திரம் தாக்கல் செய்யப்பட்டபோதே, மாத்தளை மாவட்டத்தில் நிலவும் நீர் பிரச்சினை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி இவ்வாறு தெரிவித்தார்.
மொரகஹாகந்த நீர்த்தேக்க திட்டத்தின் மூலமும் மாத்தளை மாவட்டத்தின் தம்புளை, கலேவல போன்ற விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லையெனவும், இங்குள்ள நாளந்த உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் மூலம், 40 குளங்களுக்கு நீரை வழங்க முடியுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
16 minute ago
28 minute ago