Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 14 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஜலீல்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப்பெற்று சித்திபெற்ற மாணவ மாணவிகளைப் பாராட்டி பரிசில்கள் வழங்கும் நிகழ்வு கலேவெல தேவஹுவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அந்த பாடசாலையின் அதிபர் எம்.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது.
அத்துடன், வாசிப்புத்திறனை விருத்தி செய்யும் நோக்கில் கட்டுரை , கவிதை , பேச்சு, சொற்பொழிவு ஆகியனவற்றில் திறமை காட்டிய மாணவ மாணவிகளைப் பாராட்டி அவர்களுக்குப் பரிசில் வழங்கப்பட்டது.
அதுமட்டுமன்றி ஊடக மற்றும் சமூகத்துறைகளில் ஈடுபாடு காட்டுபவர்களுக்குப் பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வை, முஸ்லிம் மீடியா போரம் ,இளம் எழுத்தாளர்கள் சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தின. முஸ்லிம் மீடியா போரம் மாத்தளை மாவட்ட இணைப்பாளரும் இளம் எழுத்தாளர் சம்மேளனத் தலைவருமான எம்.நிஜாமுத்தீன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன் தேசிய அமைப்பாளர் ரசீத் எம் ரியாழ் செயலாளர் மெளலவி ஏ.காதிர்காண் ஆகியோர் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர்.
இதன் அடுத்த நிகழ்வாக மாத்தளையில் கவிதை அரங்கொன்றையும் இளம் கலைஞர்களின் ஒன்றுகூடலொன்றையயும் நடாத்துவதற்கான ஏற்பாட்டையும் மேற்கொள்ள இருப்பதாக எம்.நிஜாமுதீன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .