Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 10 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
மாத்தளை, நாவுல நகரங்களை இலக்குவைத்து, போலியான இரத்தினக்கற்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில், பெண்கள் குழு ஒன்று ஈடுபட்டு வருகிறது என, இரத்தினக்கல் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இரத்தினக்கற்கள் துறைக்குப் பெயர்பெற்ற லக்கல, களுகங்க, எலஎர, பக்கமூன உள்ளிட்ட பிரதேசத்தில் வசிப்பதாகத் தெரிவித்தே, இந்த மோசடி வர்த்தகத்தில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், தமது கணவர்மார், மதுபாவனைக்கு அடிமையாகிப் பணத்தைச் செலவளிப்பதாகவும், அவர்களுக்குத் தெரியாமலேயே இரத்தினக்கற்களை விற்பதற்காகக் கொண்டு வருவதாகவும் வர்த்தகர்களிடம் தெரிவிக்கும் அவர்கள், இவ்வாறு தெரிவித்தே பலரை ஏமாற்றியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, மாத்தளை பொலிஸ் நிலையத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, இவ்வாறான நபர்கள் தொடர்பில் முறைபாடுகள் கிடைத்து வருவதாகவும், எனவே தமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் நபர்கள் குறித்து, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
5 hours ago
10 May 2025