R.Maheshwary / 2021 நவம்பர் 11 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை- தொடகமுவ பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட விபசார நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (10) மாலை மாத்தளை தொகுதிக்கு பொறுப்பான குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சுகத் பண்டாரவுக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே, குறித்த விபசார நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு, மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இரண்டு பெண்களும் வாரியபொல மற்றும் ஹிக்கடுவ பிரதேசங்களையும் அதன் முகாமையாளர் அங்கொட பிரதேசத்தையும் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையத்தின் முகாமையாளராக செயற்பட்டவர், ஏற்கெனவே விபசார நிலையமொன்றை நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என்றும் மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
21 minute ago
30 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
47 minute ago
2 hours ago