R.Maheshwary / 2022 ஜூலை 12 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
நாட்டின் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து தமிழக அரசாங்கத்தால் அதிகளவான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பொருள்கள் நேற்றைய தினம் (11) மாத்தளை மாவட்டத்துக்கும் ரயில் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்னவின் ஆலோசனைக்கமைய, குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்காக இந்த நிவாரணப் பொருள்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
குறித்த நிவாரணப் பொருள்களை மாத்தளை ரயில் நிலையத்தில் வைத்து மாத்தளை மேலதிக செயலாளர் நிசாந்த கருணாதிலக மற்றும் சமலா அத்தபத்து ஆகியோர் பொறுப்பேற்றதுடன், உக்குவளை தொகுதிக்கான பொருள்கள் உக்குவளை ரயில் நிலையத்தில் வைத்து, உக்குவளை பிரதேச செயலாளரால் பொறுப்பேற்கப்பட்டது
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago