Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 06 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஸ்ரீ சண்முகநாதன்
ஹட்டன், செனன் தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில், மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டிருந்த பஸ் தரிப்பிடம், மாயமாய் மறைந்துள்ளதால் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பொது மக்ககளின் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு உதவும் வகையில், செனன் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகில், பஸ் தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மழை மற்றும் வெயில் காலத்தில், ஒதுங்கியிருந்து பயணத்தை மேற்கொள்ளக் கூடியதாக, பல வருடங்களாக இந்த பஸ் தரிப்பிடம் இருந்து வந்ததாகவும், எனினும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விடுமுறை முடிந்து, பாடசாலை மீண்டும் கடந்த மாதம் 28ஆம் திகதி கற்றல் நடவடிக்கைக்கு ஆரம்பமான போது, அங்கிருந்த பஸ் தரிப்பிடத்தைக் காணவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இப்போது மழைக் காலம் ஆரம்பித்துள்ளதால், மாணவர்கள் ஒதுங்கி நின்று பயணம் மேற்கொள்வதற்கு, சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
1 hours ago
25 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
25 Aug 2025