Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.குமார்
பலாங்கொடையில் பெய்து வரும் கடும் மழையால், பலாங்கொடை- மாரதென்ன தோட்ட முதலாம் பிரிவு லயக் குடியிருப்பு மீது மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் நான்கு வீடுகள் முற்றாக சேதமாகியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் விடுகளில் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
குறித்த லயக்குடியிருப்புக்கு 2016ஆம் ஆண்டு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அங்கு வசித்தவர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் கட்டிகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அது பாதியில் இடைநிறுத்தப்பட்டதால், பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட வீடுகளுக்கே சென்று வசிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம்(2) தொடக்கம் பெய்த கடும் மழையால், நேற்று (4) அதிகாலை 3.30 மணி அளவில் பாரிய மண்மேடு ஒன்று லயக் குடியிருப்பு மீது சரிந்து வீழ்ந்துள்ளது.
மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியையும் பாதிக்கப்பட்டவர்களையும் பார்ப்பதற்கு இதுவரை எந்தவொரு அதிகாரியும் வருகைத் தரவில்லை என்பதுடன், இவர்களுக்கான எவ்வித உதவியும் இதுவரை கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago