Ilango Bharathy / 2021 ஜூன் 30 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
”பெருந்தோட்ட நிர்வாகங்கள் மாற வேண்டும், இல்லையேல் மாற்றப்படுவீர்கள்” என
எச்சரிக்கை விடுத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ்,
தொழிலாளர்கள் மீது பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்ந்தும் மனிதாபிமானற்ற
விதத்தில் நடந்துக்கொள்வதாகக் குற்றம் சுமத்தினார்.
இன்று (30) எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், கல்வி, அபிவிருத்தி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு பெருந்தோட்ட மக்கள் முகம் கொடுத்து வரும் நிலையில், தற்போது தோட்ட கம்பனிகளும் மக்களிடம் மனிதாபிமானற்ற ரீதியில் செயற்பட்டு வருகிறது என்றார்.
நாளொன்றுக்கு 18 கிலோகிராம் கொழுந்தைப் பறித்தால் மாத்திரமே 1,000 ரூபாய்
அடிப்படை சம்பளம் வழங்கப்படுமென தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் விடுப்பதால் பல
தோட்டங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாகவும், இதற்கமைய இன்று
(30) கொட்டியாகலை தோட்டத்திலும் சத்தியாகிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்றார்.
எனவே இந்தப் போக்கிலிருந்து பெருந்தோட்ட கம்பனிகள் மாற வேண்டும் என
தெரிவித்த அவர், பெருந்தோட்ட மக்களும் இந்நாட்டின் பிரஜைகளே எனவே,
அவர்களுடைய பிரச்சினைகளை அரசாங்கம் கண்டும் காணாமல் இருப்பது ஏனோ எனக்
கேள்வி எழுப்பினார்.
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago