Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 08 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கு முன்னும் பின்னும் பெண்கள் இருக்கிறார்கள். பன்முக திறமைகள் கொண்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் உருவாக்கிய மாற்றங்கள் அதிகம். பெண்களுக்கான சம உரிமை மற்றும் பொருளாதார சுதந்திரமே ஒரு சமூகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், அனைத்து துறைகளிலும் வெற்றி நடைபோடும் அனைத்து மகளிருக்கும் தன்னுடைய இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
பெண் என்பவள் இந்த தேசத்தைக் கட்டியமைக்கும் வலிமை கொண்டவள். ஒரு குடும்பத்தை முன்னேற்றவும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் பெண்களின் பங்கு என்பது அளப்பரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடப்படுமிடத்து, பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகளவில் வழங்கப்படும் இடத்தில் இலங்கை காணப்படுகிறது என்றும் அதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இலங்கையில் பெண்கள் வேலைக்கு சென்ற முதல் சமுதாயம் மலையகமே. மலையக பெண்களின் தைரியமான செயற்பாட்டால் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டது. நாட்டிற்கே முன்னுதாரணமாக செயற்பட்டவர்கள் மலையக பெண்களே. அதேபோல் உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் ஒரு இலங்கையரே.எனவே அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அனைத்துத் துறைகளிலும் சம அந்தஸ்து பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்குதாரர்களாக பெருந்தோட்டப் பெண்கள் உள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது என்றார்.
பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும். அத்தகைய மாற்றத்தின் தொடக்கமாக நம்முடைய இல்லங்கள் அமையட்டும்.
பெண்களை மதித்து கொண்டாடுவதுடன் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவதையும் நாம் அனைவரும் நம்முடைய வீடுகளிலிருந்து தொடங்குவோம் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்
56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago