Editorial / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தான் மாளிகையில் வாழும் அரசியல் வாழ்க்கையை, முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாஸ, குடிமக்களின் வரிக்கட்டணங்களில் வாழும் ஜனாதிபதியாக வாழ விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
வருடத்தின் 365 நாள்களிலும் 24 மணித்தியாலங்களுக்கும் மக்களுக்கே சேவையில் ஈடுபட விரும்புவதாகவும் தான் பேராசைக் கொண்டவன் அல்லன் என்றும் அவ்வாறானதொரு நிலைமைக்கு, தன்னை எப்போதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் விவசாயிகளின் உயிரைப் பாதுகாக்க, அவர்களது உற்பத்திக்கு சிறந்த விலையை, உருவாகவுள்ள புதிய அரசாங்கத்தினூடாக வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
39 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
9 hours ago
02 May 2026