Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
மு.இராமச்சந்திரன் / 2017 நவம்பர் 18 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டப் பகுதிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த, பெருந்தொகையான மாவா போதை பொருள் நிலையமொன்று கொட்டகலையில் இன்று(18) சுற்றி வளைக்கப்பட்டது.
தலவாக்கலை அதிரடிபடையினரும் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 100 கிலோ மாவா போதைப் பொருள் உட்பட இனிப்பு பானங்கள் புகையிலை போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன், வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரி தெரிவித்தனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .