2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மினி சூறாவளியால் 14 வீடுகள் சேதம்

Freelancer   / 2023 ஏப்ரல் 16 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

லிந்துலை பெசிபன் தோட்டத்தில் நேற்று வீசிய மினி சூறாவளி காரணமாக 14 வீடுகள் சேதமைந்துள்ளதுடன்,  74 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

 மழையில்லாத போது திடீரென மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. அதிகமான தகரங்கள் மற்றும்  ஏனைய பொருட்களும் தூர இடங்களுக்கு அள்ளுண்டு சென்றதாக மக்கள் குறிப்பிட்டனர்.

மேலும் இருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. வீடுகளும் பலத்த சேதமாகியதோடு வீட்டில் இருந்த பொருட்களும் சேதமாகின.

காற்றினால் மின் கம்பங்கள் கம்பிகள் சேதமாகியதால்  இரண்டு மணி நேரம் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தோட்ட நிர்வாகம் தேவையான நிவாரண உதவிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதோடு, சேதமாகிய வீடுகளை புனரமைத்து தருவதாக தோட்ட நிர்வாக முகாமையாளர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் பிரதேசத்தில் நேற்று மாலை 3 மணி அளவில் ஆலங்கட்டி மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X