2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மினி சூறாவளியால் 15 குடும்பங்கள் பாதிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளை மற்றும் லக்கலை ஆகிய பிரதேசங்களில், நேற்று (14) மாலை வீசிய கடுங்காற்றுக் காரணமாக, 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என, மாத்தளை மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

கடுங் காற்றினால், வீடுகள் பலவற்றின் கூரைகள் சேதமடைந்துள்ளதெனவும் வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்றும் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்க வைப்பதற்கு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாத்தளை மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X