R.Maheshwary / 2022 ஜனவரி 17 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்றவர்கள் பயணித்த காரொன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர் என, நல்லதண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நல்லதண்ணி- மஸ்கெலியா பிரதான வீதியின் ரிகாடன் பகுதியில் இன்று (17) பகல் 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாத்திரையை முடித்துக்கொண்டு, பேராதனை நோக்கி பயணித்த காரின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையால், கார் கட்டுபாட்டை இழந்து அதிக மின்வலுவைக் கொண்ட மின்கம்பத்தில் மோதியுள்ளது.
இதனால் மின்கம்பம் வீதியில் சரிந்து விழுந்ததால், குறித்த வீதியுடனான போக்குவரத்து 30 நிமிடங்கள் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
36 minute ago
2 hours ago