Freelancer / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக்க
தணமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரியாரா இந்துனில்புர பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டு யானையொன்றின் சடலம், திங்கட்கிழமை (06) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தோட்டம் ஒன்றினூடாக யானை சென்ற போது மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
30 வயதுடைய இந்த யானை சுமார் 08 அடி உயரம் கொண்டது என்றும் யானையின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நேற்று (07) நடைபெறவிருந்தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தணமல்வில பொலிஸார் மற்றும் தணமல்வில வனஜீவராசிகள் அலுவலகத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago