Janu / 2026 மார்ச் 16 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தல, மஹகொடயாய பிரதேசத்தில் பயிர் நிலமொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானையொன்று திங்கட்கிழமை (16) அதிகாலை உயிரிழந்துள்ளது.
விவசாய நிலமொன்றில் யானையொன்று உயிரிழந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது யானையின் சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்த யானை சுமார் 15 வயது மதிக்கத்தக்கது எனவும், அதன் உயரம் 7 அடி எனவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வனவிலங்குகளிடமிருந்து பயிர் நிலத்தை பாதுகாப்பதற்காக, வீட்டின் மின்சார தொகுதியிலிருந்து மின்சாரம் பெற்று சட்டவிரோதமான முறையில் குறித்த மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பயிர் நிலத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புத்தல பொலிஸாரும், மொனராகலை வனவிலங்கு அலுவலக அதிகாரிகளும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சுமனசிறி குணதிலக்க

5 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago