Editorial / 2021 நவம்பர் 07 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை – லுணுகலை, அலகொலகல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாகவும், 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் இருந்த உபகரணமொன்றுக்கு மின்சாரம் பெற்றுக் கொள்ள முயன்ற போதே, சிறுவனை மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனையடுத்து, உடனடியாக லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் லுணுகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
26 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
43 minute ago
2 hours ago