2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மிளகாய்த்தூள் தூவி தங்கச் சங்கிலி அபகரிப்பு

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 06 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம். செல்வராஐா


கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந் யுவதி ஒருவரின் கண்களுக்கு மிளகாயத்தூள் தூவிவிட்டு, அந்த யுவதயின் தங்கச் சங்கிலி ​அபகரிக்கப்பட்ட சம்பவமானது, பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 13 ம் கட்டைப் பகுதியில் பதிவாகியது.

 பசறை நகரிலுள்ள வைத்திய சிகிச்சை நிலையம் ஒன்றில் கடமை புரியும்   27 வயதுடைய  யுவதியும், யுவதியின்தகப்பனாரும் யுவதியின் உறவினர் ஒருவரும் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில்,  பசறை 13 ம் கட்டைப் பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் , மூவரின்  கண்களுக்கும் மிளகாய்த்தூள் தூவப்பட்டு தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.

  சுமார் 30,000 ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளதாக  பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பசறை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X