2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மிளகு உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை

Kogilavani   / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எமது நாட்டின் விவசாயப் பொருளாதாரம் பற்றிய வரலாற்றுத் தகவல்களுடன் நாட்டை மீண்டும் விவசாயப் பொருளாதாரத்தை நோக்கிக் கொண்டு செல்வதில், மிளகு உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கின்றது” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

“மிளகு உற்பத்தியாளர்களை பலப்படுத்தவும் அத்தொழிற்றுறையை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மீள் ஏற்றுமதியால் கடந்தகாலத்தில் உள்நாட்டில் மிளகின் விலை வீழ்ச்சியடைந்தபோது, அது தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது” என்றும் அவர் கூறினார்.

சர்வதேச மிளகு உற்பத்தி அமைப்பின் 45 ஆவது சர்வதேச மாநாடு, கண்டி ஏர்ல் ரீஜன்ஸி ஹொட்டலில், நேற்று(30) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கூறிய அவர்,

“தேசிய விவசாய உற்பத்தியையும் கைத்தொழில்களையும் மேம்படுத்துவதற்கு, அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதன்மைச் செயற்றிட்டங்களான தேசிய உணவு உற்பத்தி செயற்றிட்டத்திலும் கிராமசக்தி மக்கள் இயக்கத்திலும் மிளகு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் பல உள்ளடங்கியுள்ளன” என்றார்.

இம்மாநாடு, எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை, கண்டியில் நடைபெறவுள்ளதுடன் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகள் இதில் பங்குபற்றுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .