2025 ஜூலை 30, புதன்கிழமை

மீட்புப் பணிகளுக்காக ஹெலிகள்

Kogilavani   / 2017 ஜூலை 14 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

அனர்த்தங்கள் ஏற்படும்போது, தரைவழி பாதைகளைப் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில், ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தும் வேலைத்திட்டம், பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.  

இது தொடர்பில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்துள்ளதாவது,   “அனர்த்தங்களின் போது தரைவழிப் பாதைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது. அத்துடன், அப்பாதைகளை பயன்படுத்துவது அபாயகரமானதாகவும் உள்ளது. இதனால், அனர்த்தங்களில் சிக்குண்டு இருக்கும் பொதுமக்களை காப்பாற்றுவதற்கு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.    இதற்காக, எதிர்காலத்தில் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவுள்ளன. பதுளை மாவட்டத்தின் 16 இடங்களில், ஹெலிகொப்டர்களை இறக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.   

இதற்கென, எம்.ஐ.17 -பேல் 212 ரக ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.   பதுளை மாவட்ட அரச அதிபர் நிமால் அபேசிறியின் ஆலோசனைக்கு அமைவாகவே, இவ் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .