Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குரிய யட்டியாந்தோட்டை- நாகஸ்தன்ன தோட்டத்தின் 300 ஏக்கர் காணியை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று (16) நாகஸ்தன்ன தோட்ட மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சீபொத்- கம்பளை வீதியின் ஹொரகொல பொலிஸ் காவலரணுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நாகஸ்தன்ன தோட்டத்தின் உதவி தோட்ட அதிகாரியின் வீட்டுக்கு அருகில் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.
இதேவேளை கடந்த மாதமும் குறித்த தோட்ட மக்களால், தோட்ட காணியை தனியாருக்கு
வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago