2025 மே 08, வியாழக்கிழமை

மீன் விற்பனை நிலையங்களைத் திறப்பது குறித்து தீர்மானமில்லை

Kogilavani   / 2020 நவம்பர் 06 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

மாதம்பை நகரில் மீன் விற்பனை சந்தை மற்றும் ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் திறப்பது குறித்து இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று கொடக்கவெல பிரதேசசபையின் தவிசாளர் பியந்த குணதிலக்க பண்டார தெரிவித்தார்.

மாதம்பை மீன் விற்பனை சந்தை, வர்த்தக நிலையங்கள் மற்றும் அப்பிரதேச மக்களுக்கு கொரோனா தொற்று குறித்து தெளிவுபடுத்தும் செயல்பாடு, கொடக்கவெல பிரதேச சபை தலைவர் பியந்த பண்டார, காவத்தை பிரதேச செயலாளர் கயாணி கருணாரத்ன ஆகியோர் தலைமையில்,  நேற்று (5); நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 

'மாதம்பை மீன் விற்பனை சந்தை மற்றும் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன என்று,  ஊடகங்களில் தவரான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளதையடுத்து மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

'மேற்படி நகரில் அத்தியாவசிய நிலையங்களைத் திறப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பலசரக்குக் கடைகள், மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

'மீன் சந்தை மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. காவத்தை மற்றும் கொடக்கவெல பிரதேசங்களில் கொரோனா தொற்றார்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மேலும் பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. பி.சி.ஆர் செய்த பலருக்கு ஆபத்தான நிலை எதுவும் காணப்படவில்லை. பலர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருள்கள் அந்தந்த பிரதேச செயகத்தின் ஊடாக வழங்கப்ட்ட வருகின்றது.

எவ்வாறாயினும் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து நாம் அவதானத்துடன் செயல்பட வேண்டும்' என்று கொடக்கவெல பிரதேசசபையின் தவிசாளர் பியந்த குணதிலக்க பண்டார மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X