Freelancer / 2023 மார்ச் 02 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
நுவரெலியாவில், வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை முதல் இம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது.
கந்தப்பளை,இராகலை,வலப்பனை ஆகிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இப்பிரதேசங்களில் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், வீதிகளில் வாகனங்களை செலுத்துவதில் சாரதிகள் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
மேலும் பிரதான வீதிகளில் செல்லும் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு அவதானத்துடன் பயணிக்குமாறும், வேக கட்டுப்பாடுடன் பயணிக்குமாறும் போக்குவரத்து பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago