2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்த மரம் : ஒருவர் உயிரிழப்பு

Freelancer   / 2025 நவம்பர் 24 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்லை - ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று இரவு முச்சக்கர வண்டியின் மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 

மேலும், விபத்தில் காயமடைந்த இரண்டரை வயது குழந்தை, பெண் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று இரவு 9.20 மணியளவில் மாவனெல்லை - ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீதே தலகொல்ல பகுதியில் வைத்து மரம் வீழ்ந்துள்ளது. 

காயமடைந்தவர்கள் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் 37 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மரம் வீழ்ந்ததன் காரணமாக மாவனெல்லை - ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் தற்போது போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

எனவே, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X