Freelancer / 2021 நவம்பர் 07 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும் இலங்கை பொலிஸ் திணைக்களமும் இணைந்து முச்சக்கர வண்டிகளுக்கான கியூஆர் (QR) குறியீடு கொண்ட புதிய ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன.
அதன் அடிப்படையில், நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு நாவலப்பிட்டி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால், நேற்று (06) புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
அந்த கியூஆர் குறியீடு கொண்ட ஸ்டிக்கரில் உள்ள முச்சக்கர வண்டி மற்றும் முச்சக்கர வண்டியின் உரிமையாளரின் அனைத்து தரவுகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கும் வழங்கப்பட்டுள்ள திறன்பேசி மென்பொருளைக் கொண்டு, கியூஆர் குறியீட்டை சரிபார்க்கும் போது, முச்சக்கர வண்டியை பரிசோதிக்கும் பொலிஸ் அதிகாரி முச்சக்கர வண்டியின் விரிவான அறிக்கையைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் கியூஆர் குறியீடு கொண்ட ஸ்டிக்கர் அச்சிடப்பட்டு, குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் தொடர்புடைய ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் குறித்த ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கியூஆர் குறியீடு கொண்ட ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலம் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றங்களைத் தடுக்கவும் முச்சக்கர வண்டிகள் திருடுவதைக் கட்டுப்படுத்தவும் முடியும் என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
23 minute ago
32 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
32 minute ago
49 minute ago
2 hours ago