2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

முடக்கப்பட்ட கிராமங்கள் விடுவிப்பு

Kogilavani   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஜலீல்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பலர் இனங்காணப்பட்டதையடுத்து, சுமார் 20 நாட்களாக முடக்கப்பட்டிருந்த உக்குவளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட பல கிராமங்கள், நேற்று (15) முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.

வரக்காமுர, வரகந்த-மட்டாவ, மீதெனிய, தெஹிபிட்டிய ஆகிய கிராமங்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.

எனினும் பொதுசுகாதார விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி நடக்குமாறும் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொதுசுகாதார அதிகாரிகள், மேற்படி கிராம மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X