2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முட்டை விற்ற மூவருக்கு சிக்கல்

Freelancer   / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன், கொட்டகலை மற்றும் நோர்வூட் பிரதேசத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளையும் விட கூடுதலான விலைக்கு முட்டைகளை விற்பனைச் செய்தனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வர்த்தகர்கள் மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் அதிகார சபையின் நுவரெலியா காரியாலயத்துக்கு பொறுப்பான அதிகாரி அமில ரத்னாயக்க தெரிவித்தார்.

அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த நுகர்வோர் செய்த முறைப்பாடுகளுக்கு அமைய, ஞாயிற்றுக்கிழமை (09) திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, முட்டையொன்று 56 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையிலும் விற்பனைச் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.  

இதேவேளை, இந்த மூன்று வர்த்தக நிலையங்களிலும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படவில்லை என்றும் அமில ரத்னாயக்க தெரிவித்தார்.

                                                                                                                    ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X