2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

முதலாவது கலப்பு முறை முன்பள்ளி திறந்து வைப்பு

Janu   / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்திற்கான முதலாவது கலப்பு முறை முன்பள்ளியான  The Kids,  நுவரெலியா மாவட்டத்தின் பீட்ரு  தோட்டத்தில் உத்தியோக பூர்வமாக  வெள்ளிக்கிழமை (22)  அன்று திறந்து வைக்கப்பட்டது.

கெளனி வெளி பெருந்தோட்ட நிறுவணம்  மற்றும் மனித வள அபிவிருத்தி நிதியம் (Trust) ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்  குமார் நடேஷன் கலந்து கொண்டார்.

இது மாணவர்களுக்கான வகுப்பறை கற்பித்தலுடன் இணைய வழி கற்பித்தலையும் மேற்கொள்ளப்படும் வகையில் உருவாக்கப்பட்ட 71 வது  கலப்பு முறை பாடசாலை ஆகும். ஹேமாஸ் அவுட்ரிச் நிறுவனத்தின் அன்பளிப்பாக இப்பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. ஹேமாஸ் அவுட்ரிச் நிறுவனம் 70 பாடசாலைகளில் 250 ஆசிரியர்களும் 4000 மாணவர்களும் கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிகழ்வில் ஹேமாஸ்  நிறுவனத்தின் குரும்ப பணிப்பாளர்  அப்பாஷ்  . ஹேமாஸ் அவுட்ரிச் நிறுவன நிறைவேற்று அதிகாரி  ஷிரோமி. மனித வள அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் லால் ரவீந்திர பெரேரா. மனித வள அபிவிருத்தி நிலைய பிராந்திய பணிப்பாளர் தேவரஞ்ஜன், கெளனி வெளி பிளான்டேஷனின் பிரதம நிறைவேற்று அதிகாரி  சேனக அலவத்தேகம ஆகியோருடன் தோட்ட அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்  கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாறான ஒரு கலப்பு முன் பள்ளி தமது பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டது குறித்து பிரதேச மக்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சுமார் 200 வருட வரலாற்றை கொண்ட பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர்களை பராமரிப்பதற்கு ஆரம்ப காலத்தில் பிள்ளை மருவம் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவர் பராமரிப்பு நிலையம் பின்னர் முன் பள்ளிகளுடன் கூடிய நிலையங்கள் உருவாக்கப்பட்டன. இனி வரும் காலங்களில் அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப சிறந்த கல்விமான்களை உருவாக்கும் வகையில் மனிதவள அபிவிருத்தி நிலையம் தனது செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்கி கொண்டிருக்கும் ஹேமாஸ் அவுட்ரிச் மற்றும் கெளணி வெளி பெருந்தோட்ட நிறுவனத்துடன் இணைந்து கலப்பு முறை The Kids முன்பள்ளிகளை நிர்மாணித்து அதன் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கும் என இதன் போது மனித வள அபிவிருத்தி நிலையத்தில் பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த இரு தசாப்தங்களுக்கு முன்பு  இந்தப் பிரதேசத்தில் இருந்து ஓர் இருவர் மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு சென்றனர். ஆனால் தற்போது அதை எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது எதிர்வரும் காலங்களிலும் மேலும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அத்தோடு சிறுவர் பராமரிப்பு நிலையம் என்ற கருத்து கட்டிடம் எதிர்காலத்தில் நிச்சயமாக இல்லாமலாக்கப்பட்டு அதற்கு பதிலாக கலப்பு முறை முன்பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மலையக நிருபர்கள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .