Editorial / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோன நோயாளிகளுடன் நேரடி தொடர்பில், ஒன்றாக உறங்கி, வேலை செய்து, பயணித்து வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களைச் செய்யுமாறு தான் கூறியதாகவும் ஆனால், அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் போடுவதற்கு, “பொய் தகவல்” தந்ததாக, தன்னுடைய கருத்தை திரிவுபடுத்திக் கூறுவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“எஸ்.பி திசாநாயக்க, கம்மன்பில, இன்னும் பல அரசாங்க அமைச்சர்கள் உட்பட, டேன் பிரியசாத் என்ற, வழமையாக முஸ்லில் மக்களைத் தீட்டி தீர்க்கும் இனவாதி வரை, என்னைப்பற்றி கேவலமாக பேசினார்கள்.
”இவர்களது இணையம் முழுக்க, என்னை, “வெளிநாட்டுக்கான், கள்ளத்தோணி, பறத்தமிழன், சக்கிலியன், புலி, பிசாசு” என்றெல்லாம் சுந்தர சிங்களத்தில் திட்டிதீர்த்தார்கள்.
“அரசாங்க ஆதரவு தமிழ் பேஸ்புக் போலி கணக்குகளும் என்னை விமர்சனம் செய்தன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பௌத்த தகவல் நிலைய இயக்குனர் ஜிநானந்த தேரர், தன்னை கைது செய்யும்படி பொலிஸ்மா அதிபரிடம் புகாரும் செய்தார் என்றும் பொலிஸ் வீட்டுக்கு வரும்வரை பார்த்துகொண்டு இருந்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பதிவிட்டுள்ள அவர்,
“தமிழரோ, முஸ்லிமோ, அரசியல்வாதிகள், தேசிய பிரச்சினைகள் பற்றி பேசக்கூடாது வாயை மூடிக்கொண்டு வீசுவதை பொறுக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்பது இவர்களது எழுதப்படாத சட்டம்.
“எல்லோரையும் போல் நான் “கப்சிப்” ஆள் இல்லை என இவர்களில் சிலருக்கு இன்னமும் தெரியவில்லை.
“'முதல் தொடர்பாளர்' என்ற இப்படியானோர், சுமார் 40,000 பேர் இருப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா கட்சி தலைவர் கூட்டத்தில் கூறியதைத் தான் நான் சொன்னேன் என்று நேற்று விசேட ஊடக மாநாட்டில் நான் சிங்களத்தில் உரக்க சொன்னதும், இவர்கள் “கப்சிப்” ஆகி விட்டார்கள்.
“பெரிய இடத்தில், சவேந்திர சில்வாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோ, என்னவோ! போதாதற்கு அவர் பாடசாலை, பல்கலைக்கழகத் திறப்புகளுக்கு எதிராகவும் பேசியுள்ளார்.
“இன்று கொழும்பில் சோதனையின் போது ஒரே நாளில், ஒரே இடத்தில் 24 பேர் அகப்பட்டவுடன், என்னை திட்டிய நபர்கள், இப்போது இஞ்சி தின்ற குரங்குகளை போல முழிசிக்கொண்டு இருக்கிறார்கள்.
“மீண்டும் ஊரடங்கை நீடித்துள்ளார்கள். இவற்றையிட்டு நான் மகிழ்ச்சியடையவில்லை. தேர்தல் நடத்த வேண்டும் என்ற அசிங்க அவசரத்தை கைவிட்டு, அரசாங்கம் எங்கள் கருத்துகளையும் உள்வாங்கி சுகாதார நிவாரண, வாழ்வாதார நிவாரண நடவடிக்கைகளையும் முன்னெடுக்க கூறுகிறேன்.
“முதற்கட்டமாக, 'முதல் தொடர்பாளர்' களை தேடிப்பிடித்து, “சோதனை, சோதனை, சோதனை”....அவ்வளவுதான்” என்று தனது பேஸ்புக் பக்கத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மேலும் தெரிவித்துள்ளார்.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago