2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

முதல் முறையாக மூவர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு

Editorial   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

மஸ்கெலியா நல்லதண்ணீர் தமிழ் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதல் முறையாக, மூன்று மாணவர்கள், பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளார்களென, வித்தியாலய அதிபர் இரா.மேகநாதன் தெரிவித்துள்ளார்.  

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் நடராஜா ரவீந்திரன் (கெடஸ் டிவிசன், மரே குரூப்), தங்கையா ரம்யா (நல்லதண்ணீர் தோட்டம்) ஆகியோர், கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்துக்கும், செல்வசீலன் வான்மதி (பொரஸ் டிவிசன், மரே குரூப் ) கிழக்கு பல்கலைக்கழகத்தின் விபுலாந்தர் நுண்கலைப் பிரிவுக்கும் அனுமதிபெற்றுள்ளார்கள்.

மேலும் நல்லதண்ணீர் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு 2 ஏ, 1 பி சித்திகளை பெற்று சித்தியடைந்து சென்.ஜோசப் கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்ற மாணவன் ஆறுமுகம் வினோதன் (கெடஸ் டிவிசன், மரே குரூப் ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் அனுமதிபெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X