2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முதுகில் வரிக்காயங்களுடன் ஹட்டனில் சிறுவன் மீட்பு

Editorial   / 2023 ஜூன் 19 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

தாய், தந்தையால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான சிறுவன், வீட்டிலிருந்து தப்பியோடிய நிலையில், ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து ஹட்டன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பின் கீழிருக்கும் 15 வயதான சிறுவன், திங்கட்கிழமை (19) அதிகாலையில் மீட்கப்பட்டான்.

அனுராதபுரத்தை வசிப்பிடமாகக் கொண்டு மொஹமட் அம்பர் என்றச் சிறுவனே இவ்வாறு, மீட்கப்பட்டார். மாணவனான இச்சிறுவன், கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலில் பயணித்துள்ளான்.

எனினும், ஹட்டன் ரயில் நிலையத்தில் இறங்கி, ரயில் நிலையத்தில் தன்னந்தனியாக இருந்துள்ளார். இதுதொடர்பில்  ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே, விரைந்து செயற்பட்ட பொலிஸார் சிறுவனை மீட்டுள்ளனர்.

தன்னுடைய பெற்றோர் அனுராதபுரத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்று தெரிவித்துள்ள சிறுவன், தன்னுடைய குடும்பத்தில் தனக்கு அக்காவும் அண்ணனும் இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளான்.

எனினும், பாணந்துறையில் உள்ள பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து 10 ஆம் வகுப்பு வரையிலும் கல்விக்கற்றதாகவும், எனினும் பாடசாலையில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டனர் என்றும் அச்சிறுவன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இருந்து பாணத்துறைக்கு வந்த தன்னுடைய தந்தையும் தாயும் வீட்டுக்குப் போவோமென பலவந்தப்படுத்தினர். அதற்கு மறுப்புத் தெரிவிக்கவே, இவ்வாறு கடுமையான முறையில் தாக்குதல் நடத்தியதாகவும் தன்னை கட்டிவைத்து தந்தை இடுப்பு பட்டியால் தாக்கியதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.

தாய், தந்தையின் துன்புறுத்தலால், மீண்டும் வீட்டுக்குச் செல்லமுடியாது என்றும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.

சிறுவனின் உடம்பில் காயங்கள் உள்ளமையால், அச்சிறுவனை டிக்கோயா- கிளங்கன் வைத்திசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தி, நீதிமன்ற வைத்தியரை அறிக்கையுடன் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுவனின் பாதுகாவலர்களை ஹட்டன் பொலிஸ் நிலையத்துக்கு வருகைதருமாறும் ஹட்டன் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X