2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முறையாகக் கழிவுகளை அகற்றுமாறு கோரிக்கை

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

தலவாக்கலை-லிந்துலை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில், கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை என, பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால், தாம் பாரிய சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும், பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தலவாக்கலை, லிந்துலை, வணிகசேகரபுர, குமாரகம பிளேஸ், தெவ்சிரிபுர, ரத்னில்கல, ஹொலிரூட், பண்டாரநாயக்க சதுக்கம் போன்ற பகுதிகளில் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால், மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

மேற்படி பகுதிகளில், கழிவுகளை சேகரிப்பதற்காக இரண்டு நாட்களுக்கு ஒருமுறையே லொறி வருவதாகவும், லொறி வருவதற்கான சமிக்ஞை ஒலி எதுவும் இல்லாததால், சில சமயங்களில் லொறி வந்துச் செல்வதை தாம் அறிந்துகொள்வதில்லை என்றும், பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருசிலர், பிரதான பாதையில் கழிவுகளை வீசுவதால், சூழல் மாசடைவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இவ்விடயத்தை கருத்திற்கொண்டு, தலவாக்கலை-லிந்துலை நகரசபை குப்பைகளை உரிய முறையில், சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .