Editorial / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
வட்டவளை- ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அண்மையில், ரயிலுடன் மோதுண்டதில், தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளனர்.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயில் மோதுண்டே இம்மூவரும் மரணித்துள்ளார்.
அவர்கள், ரயிலுக்கு பாய்ந்துள்ளனரா? என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த மூவரும் மஸ்கெலியா- சாமிமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் உயிரழப்பதற்கு முன்னர், ரொசல்ல ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஒருவரிடம், ரயில் வரும் நேரம் குறித்து வினவி விட்டு, ரொசல்ல ரயில் நிலையத்திலிருந்து வட்டவளை ரயில் நிலையம் நோக்கி நடந்துள்ளனர்.
உயிரிழந்த மூவரில் ஒருவர் 40 வயதுடைய சாந்தகுமார் ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago