2025 மே 03, சனிக்கிழமை

‘முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறை’

Gavitha   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மாலைத்தீவில் கொண்டு சென்று புதைப்பதற்கு, அரசாங்கம் பேச்சுவார்த்தை முன்னெடுப்பதானது, முஸ்லிம் மக்களுக்கு எதிரான பேரினவாத ஒடுக்குமுறையின் நீடிப்பையே வெளிப்படுத்துகின்றது என, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா செந்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல்குழு சார்பாக அவர் விடத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஒரு நாட்டின் அடிப்படை உரிமைகள், அனைத்து குடிமக்களுக்கும் உரியன என்று குறிப்பிட்டுள்ள அவர், அவற்றைப் பாதுகாத்து நடைமுறைப்படுத்துவது, அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, அவர்களது மத, பண்பாட்டு அடிப்படையில் புதைப்பதற்கு மறுப்புத் தெரிவித்து, மொட்டைக் காரங்கணைக் கூறி எரியூட்டி வருவது, கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் சடலங்களை புதைப்பதால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது என, உலக சுகாதார ஸ்தாபனத் தெரிவித்துள்ள நிலையில், கோட்டா- மஹிந்த ஆட்சியில், முஸ்லிம் மக்கள் மீது ஒடுக்குமுறை தொடர்பதையே உணரமுடிகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையை, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி கண்டிப்பதோடு, இதற்கு எதிராக, முஸ்லிம் மக்களும் முற்போக்கு அமைப்புகளும் முன்னெடுத்து வருகின்ற வெள்ளைத் துணி போராட்டத்தையும் அமைதி வழி ஆர்ப்பாட்டங்களையும் தங்களது கட்சி ஆதரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X