Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 15 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ள பலாங்கொடை ராஸ்சகல தோட்ட வைத்தியசாலையை மீண்டும் திறப்பதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மண்சரிவு அபாயம் காரணமாக, ராஸ்சகல வைத்தியசாலை கடந்த ஒரு வருடமாக மூடப்பட்டுள்ளதால், பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மாகாண ஆளுநருக்குக் கிடைத்த முறைபாட்டையடுத்து, அவர் மேற்படி வைத்தியசாலைக்கு, செவ்வாய்க்கிழமை(12) திடீர் விஜயம் மேற்கொண்டதுடன், வைத்தியசாலைகளின் நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.
ராஸ்சகல தோட்ட வைத்தியசாலை, மண்சரிவு அனர்த்தத்துக்கு இலக்காகும் அபாயமுள்ளதாக, தேசிய கட்டட ஆராச்சி மத்திய நிலையம், கடந்த வருடம் மே மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து, சப்ரகமுவ மாகாண சபை இவ்வைத்தியசாலையை மூடியது.
ராஸ்சகல பிரதேத்தில், 400க்கும் மேற்பட்ட தோட்ட மக்கள் மற்றும் கிராமிய மக்கள் வாழ்ந்து வருவதால் அவர்களின் நன்மை கருதி, ராஸ்சகல ஆயுர்வேத வைத்தியசாலையின் மேல் மாடியில் அமைந்துள்ள வைத்தியர் விடுதிக்கு, இவ்வைத்தியசாலை மாற்றப்பட்டு, அங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் , நோயாளர்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால், நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் குறித்து, மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மற்றும் அப்பிரதேச மக்கள், மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதற்கமைவாக வைத்தியசாலை குறித்த உண்மையானத் தகவல்களை தனக்கு வழங்குமாறு, தேசிய கட்டட ஆராச்சி மத்திய நிலைய அதிகாரிகளிடம், மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
வைத்தியசாலையின் தகவல்கள் தனக்குக் கிடைத்தவுடன், இது குறித்து கருத்திற் கொண்டு, மக்களின் சேவைக்காக மீண்டும் இவ்வைத்தியசாலையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago