2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மூடப்பட்டிந்த காவத்தை, மாதம்பை நகரங்கள் திறப்பு

Gavitha   / 2020 நவம்பர் 04 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, கடந்த 10 தினங்களாக மூடப்பட்டிருந்த காவத்தை மாதம்பை நகரங்கள், இன்று (04) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கொடக்கவெல, காவத்தை ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள இருவரும், இப்பிரதேச சுகாதாரத்துறை அதிகாரிகள், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து, இந்நகரங்களை வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறந்தனர். சுகாதார வைத்திய அறிவுரைகளைப் பேணி, நகரவாசிகள் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட பின்னரே நகரங்கள் திறக்கப்பட்டன.

பேலியகொட மீன் சந்தையின் கொரோனா நோயாளர் ஒருவருடன் தொடர்பைப் பேணி வந்த மாதம்பை மீன் சந்தை வர்த்தகர் ஒருவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதேச சபைத் தவிசாளர்கள் இந்நகரங்களை மூடத் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X