2025 ஜூலை 16, புதன்கிழமை

மூதாட்டி துஷ்பிரயோகம்: மருமகன் கைது

Editorial   / 2023 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

82 வயதான மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் 57 வயது நபரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதிவான் காந்திலதா உத்தரவிட்டுள்ளார்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்த, வாகெதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

  சகோதரன் திருமணம் முடித்துள்ள பெண்ணின் தாயையே சந்தேகநபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்ட குருந்துவத்தை பொலிஸார், நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மூதாட்டி திருமணமான தனது மகளுடன் வசிப்பதாகவும், யாரும் இல்லாத நேரத்தில் சந்தேகநபர் வீட்டுக்குச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாகவும், இது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கூறியதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .