Editorial / 2023 மே 17 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய மூன்று மகள்களில் மூத்த மகளான 19 வயது யுவதியை, நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வு உட்படுத்தி வந்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அந்த யுவதியின் தந்தையான 46 வயதான நபர், கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொக்கா தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே நீதவான் மொஹமட் பாரூக் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
தன்னுடை தந்தை தன்னை தொடர்ச்சியாக அடித்து துன்புறுத்துவதாக அந்த யுவதி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்பின்னர் தந்தை கைது செய்யப்பட்டார். அந்த யுவதியான பாடசாலை மாணவி வைத்திய பரிசோதனைக்காக, டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்திய பரிசோதனையின் போது அந்த யுவதி பல வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட யுவதியின் தாய், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்குப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை அடுத்த தவணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அறிக்கையை சமர்ப்பிப்பதாக மஸ்கெலியா பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
யுவதி, வைத்தியசாலையில் சிக்கிச்சையை முடித்துக்கொண்டதன் பின்னர், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
28 minute ago
34 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
34 minute ago
56 minute ago
2 hours ago