2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மூன்று பிள்ளைகளும் தனித்துவிட்டனர்

R.Maheshwary   / 2021 மார்ச் 24 , மு.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

லுணுகலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ், கடந்த 20ஆம் திகதி, பசறை 13ஆம் கட்டையில் 200 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. அதில், உயிரிழந்த பெற்றோரின் மூன்று குழந்தைகள் தனித்துப்போயுள்ளனர் 

லுணுகலை, அட்டாவத்தையைச் சேர்ந்த 46 வயதுடைய அந்தோனி நோவாவா, அவரது மனைவியான 31 வயதுடைய பெனடிக் மொரோனா ஆகியோரின் 8,7,3 வயதான பிள்ளைகளே இவ்வாறு நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.


இந்தப் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு உதவி தேவையென அப்பிள்ளைகளின் பாட்டியான ஐ. செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.

'தனது மகன் வயரிங் வேலைக்கே சென்று வந்தார். அவருக்கு உடலில்  சத்திரசிகிச்சை ஒன்று செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பாக வைத்தியசாலைக்கு சென்றார்.  மகனுக்கு துணையாக மருமகளும் வைத்தியசாலைக்குச் சென்ற போதே இந்தக் கோர விபத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தது' எனப் பாட்டி தெரிவித்துள்ளார். 

'என்னை அம்மாவென அழைக்கும் மருமகள், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்; உணவு சமைத்து வையுங்கள்; குழந்தைகளைக் குளிப்பாட்டி உணவை கொடுங்கள் என தெரிவித்து விட்டே, வீட்டை விட்டுச் சென்றார்' என அப்பாட்டி கண்கலங்கினார்.  இதற்கமையத் தான் உணவை சமைத்துக் கொண்டிருந்த போதே, பஸ் புரண்டு மகனும் மருமகளும் இறந்து விட்டதாகக் கேள்விபட்டதாகத் தெரிவித்த அவர், 'ஐயோ கடவுளே, இந்த 3 குழந்தைகளும் என்னுடன் தனித்து விடப்பட்டு விட்டார்களே! எமக்கு வாழ்வதற்கு வழியில்லையே' என்று கதறியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X