Freelancer / 2023 ஓகஸ்ட் 26 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
சாமிமலை - கவரவில்லை பகுதியில் இன்று மதியம் 3.30 மணியளவில் குளவிக் கூடுகள் கலைந்து வீதியில் சென்று கொண்டிருந்த 3 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் ஒருவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதில், 48 வயது ஆண் 38 வயது ஆண் 42 வயது உடைய ஆண் ஒருவர் என மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப் பகுதியில் கடுமையான வெப்பமான காலநிலை தோன்றியுள்ள நிலையில் குளவி கூடுகள் கலைந்து செல்வதை காண கூடியதாக உள்ளது என அப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர். R
8 minute ago
18 minute ago
32 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
32 minute ago
44 minute ago