2025 மே 03, சனிக்கிழமை

மொகராகலையில் கொரோனா தாண்டவம்

Gavitha   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.எம்.ஹசனார்

மொனரகாலை மாவட்டத்தில், படல்கும்புர, அலுப்பொத்தை, வெல்லவாய பிரதேசங்ளில், கொரோனா ரைவஸ் தொற்று தீவிரம் அடைந்து வருவதாக, வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அலுப்பொத்தை கிராமத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவர் மரணம் அடைந்ததற்கு பின்னர், அப்பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இதன் காரணாகவே, படல்கும்புர, அலுப்பொத்தை போன்ற பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, வெல்லவாய நகரத்திலுள்ள பல வியாபார நிலையங்களில், கெரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இதனால், இப்பிரதேசத்திலுள்ள அனைத்து வியாபார நிலையங்களும் அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் அனைத்தும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X