2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

மோசடி செய்யப்பட்ட பணத்தை மீண்டும் பெற்றுத்தருமாறு முறைப்பாடு

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை, பின்னவல - உடவெல தனியார் வங்கியொன்றில், தாங்கள் வைப்பிலிட்ட 150 மில்லியன் ரூபாய் பணத்தை பெற்றுத்தருமாறு, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வங்கியில் வைப்பிலிடப்பட்ட 150 மில்லியன் ரூபாய் பணத்தை, வங்கியின் முன்னாள் முகாமையாளர் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, அவர் தொடர்ந்து 10 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

937 சேமிப்புக் கணக்குளில் இருந்து, 150 மில்லியன் ரூபாய் பணத்தை இவர் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மோசடியில் ஈடுபட்ட குறித்த முன்னாள் முகாமையாளர், வெளிநாடொன்றுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் இலங்கைக்கு திரும்பி வந்திருந்த போதே, கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .