பாலித ஆரியவன்ச / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை - அலுகொல்ல வீதியை அண்மித்துள்ள வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைத் திருடினார்கள் என்ற குற்றச்சாட்டில், 17 மற்றும் 18 வயதுடைய இருவரை, பதுளை பொலிஸார், இன்று (24) காலை கைதுசெய்துள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து சுமார் இரண்டு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளையும், பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், தனது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக, பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு முன்பாகவே, பொலிஸார், குறித்த மோட்டார் சைக்கிளை, மேற்படி இருவரிடமிருந்து மீட்டுள்ளதுடன், பொலிஸ் நிலையத்துக்கும் கொண்டுசென்றுள்ளனர்.
இறக்குவாணை மற்றும் ஹிக்கடுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மேற்படி இருவரும், தமது நண்பர்களுடன் சுற்றுலா மேற்கொண்டு பதுளைக்கு வந்திருந்த நிலையிலேயே, இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு திருடப்பட்ட மோட்டார் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு, தாம் தங்கியிருந்த சுற்றுலா விடுத்திக்குச் சென்றுகொண்டிருக்கும் போது, மேற்படி இருவரையும் வழிமறித்த பொலிஸார், அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதை அடுத்தே, அவர்களைக் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
1 hours ago